மேலுமொரு தாயார் காலமானார்?


காணாமல் ஆக்கப்பட்டுள்ள தனது பிள்ளைக்காக காத்திருந்த மற்றுமொரு தாய் உயிரிழந்துள்ளார். 

தனது இரு பிள்ளைகளையும் தாய் மண்ணுக்காக அர்ப்பணித்த ஓர் வீரத்தாய் காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடிய வண்ணம் இன்று தனது உயிரை அர்ப்பணித்துள்ளாள்.

முகமாலையை பிறப்பிடமாகவும் மந்துவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாயே இன்று காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை ஒன்பது முப்பது மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதையும் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

தமது உறவுகளை தேடிய வண்ணம் ஏக்கத்தோடும் மிகுந்த பரிதவிப்புடனும் தேடிய உறவுகளில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர்;.மீதமுள்ளவர்கள் நடைப்பிணங்களாக மிகுந்த ஏக்கத்தோடு இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

போர் முடிவுற்ற பின்னர் தமது பிள்ளைகளை தமது உறவுகளை நேரடியாக இராணுவத்திடம் கையளித்து ஒரே சாட்சியம் இவ் உறவுகளே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments