காணாமல் ஆக்கப்பட்டோர் அரசியல் சந்தையில்?


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களை தமது அரசியலுக்கு தமிழ் தரப்புக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில் கட்சிகளிற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளது.

முன்னாள் வடக்கு முதலமைச்சர்  விக்கினேஸ்வரனின்  உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும்  அவருக்கு எதிராக போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது ஒரு தரப்பு.

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி  பிரித்தாழ்வதாக அண்மையில் கூறியிருந்தார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தன.அதனை முன்னிறுத்தி முன்னணி மீது அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் யாழில் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் தமது போராட்டத்தை கஜேந்திரகுமார் பிரித்தாழ்கின்றார்  என்றால் அதற்கான ஆதாரங்களை சி.வி.விக்கினேஸ்வரன் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி  நீதி வேண்டி போராடி வருகின்றது.ஓ.எம்.பியை வெளியேறக்கோரி  தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

இதனை அரசியல் சாயத்தை பூசி இல்லாமல் ஒழித்து கோத்தா அரசை பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா? எனவும் யாழிலில் போராடி வரும் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 

No comments