சம்பியன் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை! அதிர்ச்சியில் மான்செஸ்டர் சிட்டி!

ஐரோப்பியக் கால்பந்துப் போட்டியான சம்பியன் லீக் போட்டிகளில் இரு பருவகாலத்திற்கு பிரித்தானியாவின் மான்செஸ்டர் சிட்டி விளையாட்டுக்
கழகம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடையை ஐரோப்பிய கால்பந்து சம்மேளம் (UEFA) விதித்துள்ளதுள்ளதுடன் அவர்களுக்கு 30 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விளையாடுவதற்கு விளையாட்டுக் கழகம் கையாழும் நிதி விதிமுறைகளை மீறியதற்காப இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் சிட்டியின் விளையாட்டு செலவீனங்கள் தொடர்பில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளம் விசாரணைகளை நடத்தியிருந்தது. கடந்த மாதம் நடைபெற்ற விசாரணை ஒன்றின் போது கடுமையான நிதி விதிமுறைகளை மீறியமை கண்டறியப்பட்டிருந்தது.

இதையறிந்த மான்செஸ்டர் சிட்டி நகர மக்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் கோபமடையவும் செய்துள்ளது.

மான்செஸ்டர் சிட்டி 2022 ஆம் ஆண்டுவரை கால்பந்துப் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் பெண்கள் அணிக்கு இத்தடை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவதற்கான செயற்திட்டங்களில் மான்செஸ்டர் சிட்டி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

No comments