கடனை இடைநிறுத்த இந்தியாவிடம் மன்றாடிய மஹிந்தர்

இலங்கை பெற்றுக் கொண்டுள்ள கடனை மீள அறவிடுவதை 3 வருடங்களுக்கு இடைநிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் தொடர்பிலான மீளாய்வை முன்னெடுக்கும் வரை சலுகைகளை வழங்குமாறு இந்தியாவை கோரியதாகவும் இந்திய அரசு அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்குமாயின், சீனா உள்ளிட்ட ஏனைய வௌிநாடுகளும் அவ்வாறான திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்கலாம் என பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

No comments