தமிழ் மக்கள் தனிநாட்டை விரும்பவில்லை

10 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப் புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் இன்னமும் அதன் சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்கின்றனர் என்று சேம்பிய இராணுவ தளபதியிடம் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்துள்ள சேம்பிய இராணுவ தளபதியை இன்று (25) சந்தித்த போது மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பான்மையான தமிழ் மக்களின் அபிலாஷைகள் அந்த அரசியல்வாதிகளின் சித்தாந்தத்திலிருந்து வேறுபட்டவை. புலிகளின் பயங்கரவாதத்தின் கீழ் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் ஒரு தனி நாட்டை விரும்பவில்லை. ஆனால் சில தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வை விரும்புகிறார்கள். - என்றார்.

No comments