இணைய மோசடி குறித்து விசேட எச்சரிக்கை

இணைய வழி நிதி மோசடிகள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இணையத்தளம் ஊடான வர்த்தக செயற்பாடுகள் என்ற போர்வையில் இத்தகைய மோசடிக்காரர்கள் செயற்படுவது தெரியவந்துள்ளது.

ஒரு சேவையை வழங்குவதற்கு முன்னர் தமது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறு மோசடிக்காரர்கள் வலியுறுத்தி இது போன்ற நிதி மோசடிச் செயலில் அவர்கள் ஈடுபடுவதாகவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

"பெறுமதியான கார் உங்களுக்கு கிடைத்துள்ளது எனத் தெரிவித்து, கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அதன்மூலம் குறித்த பெருசை பெற்றுக் கொள்ள இலட்சம் ரூபாவை பெற்று" இந்த மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றிய சம்பவங்கள் பல பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments