கத்தோலிக்க திருச்சபை கண்டித்தல் வேண்டும்?வலம்புரிக்கு மதரீதியான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு சைவ மகா சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அப்பாவி மக்களிற்கு வெறியூட்டி மதக் காழ்ப்புணர்வை விதைத்து மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் மதகுருமாரை கத்தோலிக்க திருச்சபை கண்டித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,நசுக்கப்பட்டு வரும் தாய்மதத்தின் உரிமைகள் தொர்பாக குரல் கொடுத்து உண்மைச் செய்திகளை வெளிக்கொணர்ந்தமைக்காக தீவக மதகுரு ஒருவரின் பின்னணியுடன் குறித்த மதம் சார்ந்த நபர்கள் கும்பலாக தீவகத்தில் திரட்டப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு யாழ் நகரிசள்ள வலம்புரி பத்திரிகை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு மோசமாக மிரட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்ட செயலானது மிகவும் கண்டனத்திற்குரியது. இது பத்திரிகை சுதந்திரத்திற்கு விடுவிக்கப்பட்ட மிக மோசமான அச்சுறுத்தலாகும்.

தொடர்ந்து சிவராத்திரி புண்ணிய காலத்திலே சைவ மக்கள் மனங்களை புண்படுத்தும் செயலை செய்யுமாறு அப்பாவி மக்களிற்கு வெறியூட்டி மதக் காழ்ப்புணர்வை விதைத்து மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் மதகுருமாரை கத்தோலிக்க திருச்சபை கண்டித்து நடவடிக்கை எடுக்க தவறுமாயின் இது சைவ மக்கள் மனதில் ஆறா வடுவாக மாறும் நிலைக்கு இட்டு செல்லும் என்பதை மனங்கொள்ளல் வேண்டும்

உண்மையை பத்திரிகை சுதந்திரத்தை மத நல்லிணக்கத்தை விரும்பும் சகலரும் இதனை கண்டித்து இவ்வாறான மோசமான அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சைவத்தமிழ் மக்கள் சார்பாக சைவ மகா சபை கேட்டு நிற்கின்றது.

No comments