யாழில் அவிழ்த்து விட்ட தொண்டமான்?


ஓவ்வொரு தீபாவளியின் போதும் தமிழர்களிற்கு தீர்வு வரும் என அவிழ்த்துவிடும் இரா.சம்பந்தனிற்கு போட்டியாக தொண்டமான் முளைத்துள்ளார்.மலையக தொழிலாளிகளிற்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுப்பது பற்றியே தொண்டமான் அவிழ்த்து காண்பிக்க தொடங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் குறித்துக் கேட்ட ஊடகவியலாளரிடம் கடுப்பாகி அவரை ஒருமையில் பேசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, கடந்த வருட இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது தைப்பொங்கலுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக் கூறினீர்களே என ஊடகவியலாளர் கேட்டபோது,“அது பொய். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா சம்பளக் கொடுப்பனவு தைப்பொங்கலுக்குக் கிடைக்குமென்று நான் சொல்லவில்லை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்றே கூறினேன். அந்தக் கொடுப்பனவு மார்ச் முதலாம் திகதி நிச்சயம் கிடைக்கும்”என்றார்.

இந்தக் கேள்வியை ஊடகவியலாளர் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவரை ஒருமையில் பேசிய ஆறுமுகன் தொண்டமான், தொடர்ந்து பதிலளித்தார்.

இதன்போது, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமநாதன் அங்கஜன் அருகில் நின்றுகொண்டு அவரது பேச்சுக்கு ஆமாப் போடும் வகையில் தலையசைத்துக்கொண்டிருந்தார் .

No comments