இராணுவ சோதனை சாவடிகளை சோதனையிட்ட ஈபிடிபி

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமயிலான குழு ஒன்றே நேற்று (08) ஓமந்தை சோதனை சாவடி தொடர்பாக ஆராய்ந்துள்ளது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் நிர்வாகசெயலாளர் கு.திலீபன்,

சோதனைகள் தொடர்பாக அங்கு கடமையில் இருந்த இராணுவ பொறுப்பதிகாரியிடம் வினவினோம். அதற்கு பதிலளித்த அவர்கள், நாங்கள் பேருந்தை நிறுத்தி பொதிகளை சோதனை செய்கிறோம். பல தடவைகள் போதை பொருட்கள் பிடிபடுகின்றது. அதனை கொண்டு வருபவர்களையும் பொலிஸார் உதவியோடு கண்டுப்பிடிக்கிறோம்.

அதுமட்டுமல்ல, பெண்கள் கொண்டுவரும் பொதிகளை பெண் இராணுவத்தினரே சோதனை செய்கின்றனர். பொலிஸாரும் உடன் இருக்கின்றனர். வேகமாக சோதனை செய்துவிட்டு பேருந்திலே ஏற்றி விடுகிறோம்.

பேருந்தை தூர நிறுத்துவது கூட இல்லை. நீங்களே பார்வையிடுங்கள். போதைப்பொருள் பயன்பாட்டையும் கடத்தலையும் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது நீண்ட காலத்திற்கு இல்லை - என்று இராணுவ அதிகாரி தெரிவித்ததாக தெரிவித்தார்.

பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், இறங்கி ஏறுவதற்கு சிரமப்படும் பயணிகளை இறங்க வேண்டாம் எனவும் பேருந்து நிறுத்தப்படும் இடத்திலேயே சோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தான் இராணுவத்திற்கு அறிவுறுத்தினேன்.

போதைபொருள் கடத்தல் நடவடிக்கையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதுடன், அமைச்சர் டக்ளசிடம் குறித்த விடயத்தினை தெரிவித்து சோதனை நடவடிக்கைகள் அகற்றப்பட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் - திலீபன் தெரிவித்தார்.

No comments