இம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்?


வடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூட்டமைப்புயமுடிவு செய்துள்ளது.

தற்போது யாழில் பின்னடைவை தரக்கூடிய சாவகச்சேரியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவியை களமிறக்க முடிவாகியுள்ளது.

அருந்தவபாலனிற்கு போட்டியாகவும் சுமந்திரனின் வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்த கடந்த தேர்தலில் மதினி எவ்வாறு பலியாடாக்கப்பட்டாரோ இப்போது ரவிராஜின் மனைவியை தெரிவு செய்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே  2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு அந்தப் பட்டியலே பயன்படுத்தப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் 2 இலட்சத்து 70 புதிய வாக்காளர்களாக இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு தேர்தலின் ஊடாக 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியலில் 29 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுகின்றனர்.

பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாவட்டங்களில் தெரிவு செய்யப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும்.

அத்துடன் மார்ச் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 முதல் மே மாதம் 6 திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

19ஆவது திருத்திற்கு அமைய நான்கரை ஆண்டுகளின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடும்.

எவ்வாறாயினும் கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய சந்தர்ப்பத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதிவரையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் எதிர்வரும் மார்ச் மூன்றாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments