சமுதாயப்பணிகளில் IIS !


தனது 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு IIS சமுதாயப்பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

வட இலங்கையிலே தனியார் உயர்கல்வித்துறையில் தனது காத்திரமான பங்களிப்பை வழங்கி வரும் IIS நிறுவனம் 04.02.2020 இல் தனது வெள்ளி விழா ஆண்டில் தடம் பதிக்கின்றது. 

பாரிய இடப் பெயர்வுடன் கூடிய யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த வேளையிலே 1996ம் ஆண்டு மாசி மாதம் 04ம் திகதி வட பகுதி இளைஞர் யுவதிகளின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி விஞ்ஞானம் சார் அறிவுப் பசியினைத் தீர்ப்பதற்கும் உலகத்தை தன்னகத்தே கொண்டிருந்த இத் தொழில்நுட்பத்தின் பால் மாணவர்களை அழைத்துச் செல்வதற்கும் IIS இன் உருவாக்கமானது ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது.

கணினி நிறுவனமாக தோற்றம் பெற்ற IIS பிரித்தானிய பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் போன்றவற்றின் இளமாணிக் கற்கை நெறிகளை கணினி விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளில் வட பகுதி மாணவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வாய்ப்பினை வழங்கியதோடு பட்டக் கல்வியை. வழங்கக் கூடிய ஒர் தனியார் உயர்கல்வி வளாகமாகவும் பரிணாமம் பெற்றது. தொடர்ந்து பிராந்தியத்தின் தேவையை கருத்தில் கொண்டு மாணவர்களிற்கு குடிசார் பொறியியல் மற்றும் வியாபார முகாமைத்துவத் துறைகளில் பட்டக்கல்வியினை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுத்தது. அதுமட்டுமல்லாது வியாபார முகாமைத்துவத்துறையிலே முதுமாணிக் கற்கை நெறியையும் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பினை IIS உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

IIS இனால் வழங்கப்படுகின்ற உயர்தேசிய டிப்ளோமா மற்றும் முதுமாணி, இளமாணி கற்கை நெறிகள் அனைத்தும் அரசின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினாலும் பல்கலைக்கழக மானியங்கள ஆணைக்குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காலத்தின் தேவையறிந்து IIS நிறுவனம் உயர்கல்வியின் பால் ஆர்வமுள்ள வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட கட்டணச் சலுகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆரம்பம் முதல் தனது கன்னியமான சேவையால் மாணவர்கள் மனதை வென்ற IIS நிறுவனம் இன்றும் தனக்கே மிடுக்கான தனித்துவத்துடன் வீறுநடை போடுகின்றது.

மேலும், எமது 25வது வெள்ளிவிழா கொண்டாட்டங்களை முன்னிட்டு பல்வேறு சமூக நலத்திட்டங்களை இவ் ஆண்டு முழுவதும் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. IIS இன் 25வது வெள்ளிவிழா கொண்டாட்ட நிகழ்வுகள் 04.02.2020 அன்று சமய வழிபாடுகளோடு ஆரம்பிக்கப்பட்டு இந் நிகழ்வின் ஆரம்பக் கொண்டாட்டம் 25.02.2020 IIS  சிவன் பண்னை வீதியில் அமைந்துள்ள வளாகத்தில் விமர்சையாக இடம்பெறவுள்ளது. தொடர்ந்து ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று 04.02.2021ம் திகதி மிகப்பிரமாண்ட அளவில் இவ் வெள்ளிவிழாக் கொண்டாட்ட நிறைவு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.

No comments