கத்தியால் வெட்டப்பட்ட நாய் ; காப்பாற்றப்பட்டது?

குளியாப்பிட்டிய பகுதியில் கத்தியால் தலைப் பகுதியில் வெட்டத் தாக்குதலுக்கு உள்ளான வளர்ப்பு நாய் ஒன்று சிகிச்சையின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளது.

குறித்த நாயை நபர் கத்தியால் வெட்டிய நிலையில் நாயின் தலையில் இடது கண்ணுக்கு அருகே கத்தியால் வெட்டப்பட்டுள்ளது.

கத்தி உள்ளிறங்கிய நிலையில் குறித்த நாய் குருநாகல் மிருக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து நான்கு மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர் கத்தி அகற்றப்பட்டு நாய் காப்பாற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று (19) குறித்த நாய் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளது.

No comments