யாழ் இளைஞன் பிரான்ஸில் பலி?

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் அகால மரணமடைந்துள்ளார்.

தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29-வயது) என்பவரே இவ்வாறு கடந்த 15ம் திகதி உயிரிழந்துள்ளார்.

மூளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிந்த இளைஞன் விடுமுறையில் இலங்கை செல்ல தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவருக்கு யாழ்ப்பாணத்தில் திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

No comments