முன்ணணி இல்லாத சி.வியின் கூட்டு?


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை  இணைத்துக்கொள்ள முடியுமென்ற கடைசி நிமிட நம்பிக்கையும் பொய்த்து போயுள்ள நிலையில் வடக்கு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வீ.விக்கினேஸ்வரனின் கூட்டு தயாராகியுள்ளது.

ஆனாலும் முன்னணி வந்தால் ஏற்றுக் கொள்ள ஏந்த நேரமும் நாங்கள் தயராகவே இருக்கிறோம். ஆனால் அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. அதனால் நாங்கள் பிரிந்து நின்று செயற்பட வேண்டியிருக்கிறதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

புதியதோர் கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் தற்போது நான்கு கட்சிகளுக்கிடையே உடன்பாடுகள் எட்டப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இதில் எங்களுடைய கட்சியுடன் ஈபீஆர்எல்எப், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம், தமிழ் தேசிய கட்சி ஆகியன இணைந்து கொள்கின்ற அதே நேரத்தில் கNஐந்திரகுமாரின் கட்சி இணைந்து கொள்ளவில்லை.

ஆனால் கNஐந்திரகுமாரின் கட்சியை ஏற்றுக் கொள்வதற்கு எந்த நேரமும் நாங்கள் தயாராகவே இருக்கின்றொம். ஆனால் அவர் தான் எங்களுடன் வராமல் எங்களை விட்டுவிட்டுச் செல்கின்றார். ஏனெனில் அவரை விடுங்கள் நாங்கள் வருகின்றோம் என்று கூறுகின்றார்.

அதாவது சுரேஸ்பிரேமச்சந்திரனின் கட்சியை இணைக்காவிட்டால் தாங்கள் வருவதாக கூறுகின்றார். ஆனால் அவரது அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

உண்மையில் நாங்கள் மூவரும் தமிழ் மக்கள் பேரவையில் ஒன்றாகவே பயணித்துக் கொண்டிருந்தோம். அதன் போதெல்லாம் சுரேஸ் அண்ணா சுரேஸ் அண்ணா என்று எத்தனையோ தடவைகள் எல்லாம் கNஐந்திரகுமார் அழைப்பதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் அவர்களுக்கிடையே ஏதோ ஒரு சில விடயங்களில் மனக் கசப்பு ஏற்பட்டதன் நிமித்தம் தற்போது அவரை வெளியேற்றுங்கள் நாங்கள் வருகின்றோம் என்று கஜேந்திரகுமார் தரப்பினர் கூறுகின்றனர்.  ஆனால் அவர்களது அந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆந்த ஒரு காரணத்தினால் நாங்கள் மூவரும் இணைந்து பயணிக்க முடியாமல் பிரிந்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எது எவ்வாறு இருப்பினும் கஜேந்திரகுமார் எம்மோடு வந்தால் நாங்கள் அவரை இணைத்துக் கொண்டு பயணிக்கத் தயாராகவே இருக்கிறோம். ஆனாலும் அவர் வர மாட்டார் என்று தான் நினைக்கின்றேன் என்றார்.

No comments