சீனா சென்று திரும்பியவர்களிற்கு கதவடைப்பு?


கொரோனா வைரஸ் பரவி வரும் சீனாவின் வுஹானில் சிக்கித் தவித்த இலங்கையர்களை தமது உடல் நலத்தை துச்சமென மதித்து ஆபத்தான விமான பயணமூலம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குழுவினர் அழைத்து வந்திருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கான பாராட்டுக்கள் பல பக்கங்களில் இருந்தும் குவிந்த வண்ணமுள்ளன.
தற்பொழுது அந்த ஊழியர்களில் பலரின் குழந்தைகளை பாடசாலை செல்வதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றது. மற்றைய குழந்தைகளின் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக அதிபர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தங்கள் குழந்தைகளுக்கு வைரஸ் வந்து கோரோனோ நோயால் பாதிக்கப்படுவோம் என்று அஞ்சுவதால் இந்த எதிர்ப்பை பெற்றோர் வெளியிடுவருகிறார்கள்
இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சில ஊழியர்கள் காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

No comments