பூஜித் - ஹேமசிறி விடுதலை

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு இன்று (05) பிணை வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவளை இதே குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments