தொடங்கியது கைது வேட்டை?


வவுனியா பன்றிகெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தின் பின் பஸ்ஸினை எரித்த சந்தேகத்தில் அந்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீயில் கருகிய நிலையில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டன. இதில் வான் சாரதியுமாவார்.
விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவரும் அடங்கியுள்ளார். பஸ்ஸை கொழுத்தியதால் பயணித்தவர்களின் உடைமைகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
வீதி விபத்தை அடுத்து வாகனங்களிற்கு தீவைத்தமை தொடர்பில் காவல்துறை வேட்டையினை தொடங்கியுள்ளது.சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,காணொளிகள் பிரகாரம் இருவர் கைதாகியுள்ளதுடன் பலரை தேடி வருகின்றது.
இதனிடையே எரிந்த வாகனங்களிலிருந்து எரியுண்ட நிலையில் சடலங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது.அவர்கள் முன்னதாகவே மரணித்தனரா அல்லது தீயினால் மரணித்தனாராவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.  

No comments