ஆவா குழுவை தேடி சுற்றிவளைப்பு?41 பேர் கைது


யாழில் ஆவா குழு இரவு கொண்டாட்டங்களில் பங்கெடுத்த நிகழ்வொன்றை இராணுவம் சுற்றி வளைத்துள்ளது.

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றையே பெருமளவிலான இராணுவத்தினர் சுற்றிவளைத்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை நிலவிவருகிறது.

யாழில் வன்முறையில் ஈடுபடும் குழு ஒன்று அவ் விடுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தே சுற்றி வளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே சுற்றிவளைப்பின் போது அங்கு தங்கியிருந்த 41 பேர் இராணுவத்தினரால் கைதாகியுள்ளனர்.

No comments