தெற்கு லண்டன் ஆயுததாரி அடையாளம் காணப்பட்டார்

தெற்கு லண்டன் ஸரெதம் பிரதான வீதியில் மக்களைக் குத்திய ஆயுததாரி நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர் 20 வயதான சுதேஷ் அம்மான் என தெரிய வந்துள்ளது.

குற்றச்செயல்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் சுதேஷ். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஸ்ரெதம் பிரதான வீதியில் தாக்குதல் நடந்த நேரத்தில் அவர் காவல்துறையின்  தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

எனினும் இது இஸ்லாமிய தொடர்பான பயங்கரவாத சம்பவம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.

நேற்றைய சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். ஆனால் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.

தெற்கு லண்டன் மற்றும் பிஷப்பின் ஸ்டோர்ட்ஃபோர்டு, ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் அதிகாரிகள் அமைந்துள்ள சுதேசின் முகவரியில் தேடுவதல் மற்றும் விசாரணைகளை ஸ்கொட்லாந்து யார்ட் நடத்தி வருவதாக் கூறியுள்ளனர்.

 இதுவரை இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments