முன்முனை தாக்குதலிற்கு தயாராகும் ஜதேக?

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் அமைக்கப்படவுள்ள பொது எதிர்க் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும், கரு ஜயசூரியவும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க் கட்சித் தலைமையை சஜித் பிரேமதாசவுக்கும், கூட்டு எதிரணியின் தலைவராக கரு ஜயசூரியவும் செயற்பட வேண்டும் என அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பௌத்த மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் கரு ஜயசூரியவின் தேர்தல் பிரவேசம் முக்கியமானது எனவும் சிரேஸ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுத் தேர்தலில் விரிவான ஒரு எதிர்த் தரப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும், இதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் ஐ.தே.க.யின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாக இன்றைய சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

No comments