தேர்தலிற்காகவே புதிய திருத்தங்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ள 21 மற்றும் 22ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையின் ஊடாக, அண்மைக்கால அரசியலில் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் இல்லாமலாக்கப்படுவதே நடைபெறும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிரதான அரசியல் கட்சிகளின்றி  ஏனைய கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தர்ப்பத்தை இல்லாது செய்யும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு திருத்த யோசனையை தோல்வியடைய செய்ய நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ள 21 மற்றும் 22ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையானது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருவதற்காக தேர்தல் மேடைகளில் பயன்படுத்துவதற்கான செயற்பாடு என்பது தெளிவாக தெரிவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  

No comments