களமிறங்கிய சஜித்?


ஐக்கிய தேசியக் கட்சியில் தனது எதிர்கால இருப்பை தக்க வைக்க சஜித் மும்முரமாக களமிறங்கியுள்ளார்.ஏற்கனவே பங்காளிகளை கையுக்குள் போட்டுக்கொண்ட அவர் தற்போது கட்சியின் உள்ளுர் தலைவர்களான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி வேட்பாளர்களை சந்திக்கவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஹர்சன ராஜகருணா எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையில் நேற்று (21) சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments