எம்பிமாருக்கு நாடாளுமன்றம்:பிந்தியோருக்கு சிறை!


இலங்கையின் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் சாராய அனுமதி பத்திரம் வைத்திருப்போர் - 100 பேர் எனவும் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் - 75 பேர் எனவும் ரஞ்சன் இராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதனோல் இறக்குமதி செய்வோர் - 4 பேர் எனவும்,
போதை பொருள் வர்த்தகம் செய்வோர் - 2பேர் எனவும் இவர்களுடன் 
சூதாட்டகாரர் ஒருவரும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தனது உரையில் பாராளுமன்ற எம்.பி.க்கள் கெரோயின் பயன்படுத்துவது பற்றி தகவல்களை வெளியிட்டிருந்தார். இதனை பியூமி ஹன்சமாலி சரியான தகவல்களை வழங்கினார். யார் கொக்கெயினுடன் நைட் கிளப்புக்கு வருபவர்கள் என்பது தொடர்பான விடயங்களையும் தந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இவர்கள் எவரும் சிறையிலில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நீதிமன்ற அமர்வு ஆரம்பமாகிய பின்னர் 10 மணிக்கு பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு சென்றவர்களுக்கு ஒருமணிநேரம் சிறை தண்டனை வழங்கப்பட்ட பரிதாபம்  நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்துள்ளது.

நேற்று காலை 10:00 மணிக்கு பின்னர் வழக்கு நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்களாக சென்ற அனைவரையும் ஒரு மணி நேரமாக சிறைக்காவலர்கள் நீதிமன்றம் சிறை கூட்டுக்குள் தடுத்து வைத்தே வெளியே செல்ல அனுமதித்துள்ளனர்.

காலை ஒன்பது மணியளவில் நீதிமன்ற அமர்வுகள் ஆரம்பித்ததாகவும், அதனை தொடர்ந்து பத்து மணிக்கு பின்னர் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்ற அனைவரையும் சிறைக்காவலர்கள் அடைத்து வைத்ததாகவும் தெரியவருகின்றது.

வழக்காளியாகவோ எதிராளியாகவோ அல்லது பிற நடவடிக்கைகளுக்காக அல்லது வழக்குகளை பார்க்க வந்தவர்களும் அன்றைய தினம் அடைத்து வைக்கப்பட்டதாகவும் இந்த சம்பவம் தமக்கு அதிர்ச்சி அளித்ததாக நீதிமன்ற வளாகத்திற்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.

No comments