திருமலையில் தேர்தலில் வித்தி:பிரிந்தவர்கள் இணைந்தனர்!


தமிழரசுக் கட்சியின் கனடாக்கிளைக்கும் யாழ்ப்பாண தலைமைகளிற்குமிடையே முறுகல் நிலை வலுவடைந்து வருகிறது. இதன் உச்சமாக கனடாக் கிளையினருக்கு குடைச்சல் கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி இரா.சம்பந்தனின் தலையீட்டால் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

கடந்த 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டக் கிளையினால் பெருமெடுப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்தவிழாவுக்கு விருந்தினர்களாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்திலும் தமிழரசுக்கட்சியின் மகளிh அணியினரால் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் பொங்கல்விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு பொங்கல் விழாக்களும் முடிவடைந்த பின்னர் பிற்பகலில் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் அந்தந்த மாவட்டக்கிளைக் கூட்டங்களும் ஏககாலத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் விழா முடிவடைந்த கையோடு தமிழரசுக்கட்சியின் மாவட்டக்கிளைப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடினராயினும் அங்கு அவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. வழக்கமாக மாவட்டக்கிளைக் கூட்டத்தில் பங்குபற்றும் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராசா,சீ.வி.கே.சிவஞானமோ அங்கு சமூகமளித்திருக்கவில்லை. அலுவலகம் வேறு மூடப்பட்டிருந்தது. நீண்ட நேரத்தின் பின்னரே மாவட்டக்கிளை முக்கியஸ்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் அந்த மாவட்டக் கிளைத் தலைவர் குகதாசன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் களமிறக்கப்படுகிறார். குகதாசன் வெற்றி பெற்றால் கட்சியினுள் கனடாக் கிளையின் செல்வாக்கு அதிகரித்துவிடும் என்று எண்ணிய தரப்புக்கள்; ஒரு திட்டத்தை வகுத்தனர். அதாவது திருகோணமலையில் குகதாசனுக்குப் போட்டியாக கவர்ச்சிகரமான ஒரு வேட்பாளரைக் களமிறக்கினால் குகதாசனுக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை சிதறடித்து குகதாசனை தோற்கடிக்கலாம் என்பதே அந்தத் திட்டம். இதற்காக முன்னைய உதயன் ஆசிரியரும் தற்போதைய காலைக்கதிர் ஆசிரியருமான வித்தியதரனை களமிறக்க  முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
வித்தியாதரன் திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்டவர். ஊடகத்துறையில் பிரபலமானவர். அரசியல் கருத்துருவாக்கத்திலும் வல்லவர். ஆயினும் பதவி ஆசை பிடித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவரைக் கண்டு கொள்வதேயில்லை. அப்படியிருந்தும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது என்ற போர்வையில் வித்தியாதரனை இந்தத் திட்டத்துக்குப் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

திருகோணமலையில் சம்பந்தரை சந்தித்த யாழ்ப்பாண தலைமைகள் திருகோணமலையில் அதிக வாக்குளைச் சேகரிக்க வேண்டுமாயின் வித்தியாதரனைப் போட்டியிட வைக்கவேண்டும் என் கோரினர்.ஆயினும் இரா.சம்பந்தர் அதனை அடியோடு நிராகரித்ததோடு குகதாசனின் கடுமையான உழைப்பு அவரை நிச்சயம் கண்டுகொள்ளாது பார்க்கலாமென தெரிவித்துள்ளார்.

இதனிடையே இதுவரை முரண்டுபிடித்துக்கொண்டிருந்த சம்பந்திகளான சரவணபவன் -வித்தியாதரன் தரப்புக்கள் இணங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வித்தியாதரனின் மகளது பதிவு திருமணத்தில் இவ்விணைவு நடந்துள்ளது.
வித்தியாதரனின் சகோதரியே சரவணபவனின் மனைவியென்பது தெரிந்ததே.

No comments