வாய்ச்சொல் வீரம்: கோத்தாவிற்கே அறுவடை!


கடந்த ஜனாதிபதி தேர்தலில்; கோட்டாபய ராஐபக்ச வென்றார் என்றால் தமிழினம் என்றதே இலங்கைத் தீவில் இல்லாமல் போகும் என தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு பிரச்சாரங்களை செய்தமை சில பின்னணிகளிலேயே நடந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் அவதானிகள் கருத்து பகிர்ந்துள்ளனர்.

அதற்கேதுவாகவே பல்கலைக்கழக மாணவர்கள் தூண்டப்பட்டு அவர்கள் கட்சி தலைமைகளை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபடவைக்கப்பட்டமையும் அத்தகைய சதி பின்னணியென சந்தேககங்கள் எழுப்பப்பட்டுள்ளது. 

அதே போன்றே ஜனாதிபதி வேட்பாளராக கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்பட்டமை மற்றும் அனந்தியின் பின்னணி என்பவை வேண்டுமென்றே தென்னிலங்கை மக்களை அச்சமூட்டி கோத்தாவிற்கு வாக்குகளை பெற மேற்கொள்ளப்பட்ட சதியென்பது அம்பலமாகியுள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு செய்த பிரச்சாரங்கள் மறுபுறமாக தென்னிலங்கையில் புலி பூச்சாண்டி காண்பிக்கவே அரங்கேற்றப்பட்டன.

அந்தப் பயப்பீதியினால் கோட்டபாயவை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக அவருக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்களிக்கும் நிலைமையை கூட்டமைப்பு ஏற்படுத்த மறுபுறமோ கூட்டமைப்பின் புண்ணியத்தில் தெற்கு மக்கள் கோத்தாவிற்கு அள்ளி கொட்டினார்.

ஆனால் தேர்தலில் யாரைத் தோற்கடிக்க வேண்டுமென்று தமிழ் மக்களிடம் வாக்களிக்கச் சொல்லிக் கேட்ட கூட்டமைப்பினர் இன்றைக்கு அவரே வெற்றி பெற்றிருக்கின்ற நிலைமையில் தாங்கள் சொன்ன எல்லாவற்றையும் மறந்து தங்களது தங்களது சுயநலன்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இல்லாமல் அதே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என்று அறிவித்திருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அனந்தி ,சிவாஜிலிங்கம் தரப்பை போன்றே தமி;ழ் தேசிய மக்கள் முன்னணியும் புலி பூச்சாண்டி காட்ட தென்னிலங்கை சமூக ஊடகங்களில் முக்கிய சந்தர்ப்பத்தை வழங்கிவிட காரணமான இருப்பதாக தெரிவித்துள்ளன தென்னிலங்கை நடுநிலை ஊடக தரப்புக்கள் .

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றியினை ஈட்ட அதே உத்திகளை பயன்படுத்த தமிழ் அரசியல் தரப்பை சேர்ந்த சிலர் தூண்டிவிடப்பட்டுள்ளதாகவும் மீண்டும் வீரப்பேச்சுக்களை கேட்க தயாராக இருக்க தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments