வவுனியாவிற்கு சிங்களவரான அலங்க!


மாவட்ட செயலர்களை தமக்கேற்ப கோத்தா அரசு மாற்றியமைக்க முற்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்ட செயலர் புதிய இடமாற்ற பட்டியலில் தப்பி பிழைத்துள்ளார். பத்து மாவட்டங்களிற்கு புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கான அமைச்சரவை அனுமதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு இடமாற்றம் அல்லது நியமிக்கப்படவுள்ள 10 மாவட்டச் செயலாளர்களில் வடக்கு கிழக்குப் பகுதியில் மட்டும் 4 மாவட்டச் செயலாளர்கள் இடமாற்றப்பட்டு அல்லது நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கானப்படும் 10 மாவட்டங்களிற்கான புதிய மாவட்டச் செயலாளர்களில் முல்லைம்தீவு மாவட்டத்திற்கு அமலேந்திரன் , கிளிநொச்சி மாவட்டத்திற்கு றூபவதி கேதீஸ்வரனும், வவுனியாவிற்கு சிங்களவரான அலங்க என்பவரும்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கலாவதியும் நியமிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்.மாவட்ட செயலரை இடமாற்றம் செய்ய டக்ளஸ் கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.எனினும் இம்முறை இடமாற்ற பட்டியலில் அவர் தப்பி பிழைத்துள்ளார்.

No comments