இந்திய உதவியில் நிர்மானித்த பாடசாலை கட்டடத் தொகுதிகள்

வட மாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்கு என இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களின் ஓர் அங்கமாக 27 பாடசாலைகளைத் தெரிவு செய்து மாணவர்களுக்கான வகுப்பறைக்
கட்டடங்களை அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கைக்கான இந்திய பதில் தூதுவர் திரு வினோத் மு ஜாக்கோப்பால் இன்று (15) யாழ்ப்பாணம் கதீஜா முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்திலும், யாழ் வளலாய் அமரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும், யாழ் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலும், யாழ் வறுத்தலைவிளான் அமரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும், முல்லைத்தீவு விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையிலும் இலங்கை ரூபாய் 55.65 மில்லியன் இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட வகுப்பறை தொகுதிகள் பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த கட்டிடங்களின் நினைவுக் கல்வெட்டுக்கள் இந்திய பதில் தூதுவராலும், வடமாகாண ஆளுனர் திருமதி பீ.எம்.எஸ். சாள்ஸ்ஸாலும் புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடந்த விழாவில் இணைந்து அப் பள்ளியின் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் ஏனைய பாடசாலைகளின் கல்வெட்டுக்கள் வீடியோ காணொளி மூலமாகவும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

No comments