உலக வரலாற்றில் நீண்ட பேரணி! பீதியில் அமெரிக்கா!

அமொிக்காவில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் இரானுவத் தளபதியின் இறுதிச் சடங்கில் 30 கிலோ மீற்றர் வரை மக்கள் ஊர்வலமாக நின்று இறுதி
மரியாதை செலுத்தியமை அமொிக்காவை பீதியடையச் செய்துள்ளது.

அத்துடன் உலகியேலே மரணமடைந்த ஒருவருக்கு 15 இலட்சம் மக்கள் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக சென்று ஜெனரல் குஸ்ஸம் மரியாதை செலுத்தியை இதுவே முதல் தடைவை எனக்கூறப்பட்டுள்ளது. இவ்வளவு மக்கள் ஈரான் அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது அமொிக்காவை கவலை கொள்ளவும் பீதியடையவும் செய்துள்ளது என அரசியல் அவதானிகள் கருதுகின்றார்கள்.

நேற்று ஈராக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட ஜெனரல் குஸ்ஸம் சுலைமானின் உடலுக்கு மிகக் பிரமாண்டமான அளவில் இறுதி மரியாதை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிழக்வுக்கு ஈராக் மற்றும் ஈரான் முக்கிய அதிகாரிகள் உட்பட 15 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் கலந்துகொண்டுள்ளனர். 30 கிலோ மீற்றர் வரை மக்கள் ஊர்வலமாக சென்றுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments