ரஷ்ய அரசாங்கம் இராஜினாமா: காரணம்?

ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவின் அரசாங்கம் இன்று (15) இராஜினாமா செய்துள்ளது.

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அந்நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்த சந்தர்ப்பம் அளிப்பதே இதற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியை அருகில் வைத்துக்கொண்டே பிரதமர் அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பிரதமரின் இந்த தீர்மானத்திற்கு ரஷ்ய ஜனாதிபதியும் நன்றி தெரிவித்துள்ளார்.

No comments