தமிழரை யாரும் கொல்லலாம்:கஜேந்திரன்?


தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை பொது மன்னிப்பில் விடுதலை செய்ததன் ஊடாக தமிழர்களை படுகொலை செய்பவர்களை நாம் விடுதலை செய்வோம் என்ற செய்தியை இராணுவத்துக்கு இலங்கை ஜனாதிபதி வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் இந்த செயற்பாடு எமக்கு அதிர்ச்சியை தரவில்லை. ஏனெனில் சிங்களத் தலைவர்களின் மனநிலையில் எப்பபோதும் மாற்றம் ஏற்படாது. இதனை நாம் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றோமென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன். 

தான் ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள இராணுவத்தினரை விடுவிப்போம் என தேர்தல் காலத்தில் கூறியிருந்தார். அதேபோல் அண்மையில் 34 இராணுவ அதிகாரிகளை சிறையில் இருந்து பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார். அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ அதிகாரியை மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடானது, தமிழர்களைப் படுகொலை செய்பவர்களை நாம் விடுதலை செய்வோம் என்ற செய்தியை இராணுவத்துக்கு வழங்கியுள்ளது. 




எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்திற்கு 113 ஆசனங்கள் வராமல் தடுக்கவேண்டிய தேவை இந்திய மேற்கு நாடுகளுக்கு இருக்கின்றது.
அத்தோடு ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்திற்கு 113 ஆசனங்கள் வராமல் இருக்குமாக இருந்தால் அது தமிழர்களுக்கும் மிக வாய்ப்பாக அமையும் எனவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments