ரஞ்சனுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

நேற்று (14) கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க எம்பியை ஜனவரி 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டமைக்காக அரசியலமைப்பின் 111சி (2) பிரிவின்படி செய்யப்பட்ட குற்றங்களுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments