உறவுகளிற்கு அள்ளி வீசும் கோத்தா?

'
இலங்கை வெளிநாட்டு தூதுவராலய சேவைகளிலும் தங்களின் நண்பர்களுக்கும் அயலவர்களுக்கும் பதவிகள் வழங்கி மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தின் நடைமுறையை கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் புதிப்பித்து இருக்கிறது. தகுதியானவர்களுக்கே பதவி என்றும் மோசடிக்காரர்களுக்கு பதவி இல்லை என்றும் பொய்களை பரப்பியவாறு தங்களின் நண்பர்களுக்கும் அயலவர்களுக்கும் பதவிகளை வழங்கி வருகிறது ராஜபக்சே குடும்பம்.
திரு கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் பாடசாலை வகுப்பு தோழரும் அமெரிக்காவில் LA நகரில் கோத்தபாயா ராஜபக்சே அவர்கள்  வதிவிடத்தின் அயலவருமான Malraj De Silva என்பவர் United Arab Emirates (UAE).தேசத்தின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவரின் வீட்டில் தங்கி இருந்து தான் கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் மகன் மனோஜ் ராஜபக்சே உயர் கல்வி கற்றதாக சொல்லப்படுகிறது. கோத்தபாயா ராஜபக்சே மார்ச் / ஏப்ரல் 2019 இல் அமெரிக்காவிற்கு பயணம் செய்த, ​​ Malraj De Silva வீட்டில் தங்கி இருந்த பொது தான் கொல்லப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கே அவர்களின் மகள் தாக்கல் செய்த கொலை வழக்கில் கோத்தபாயா ராஜபக்சே அவர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டது. இதுமட்டுமன்றி Malraj De Silva மீது பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகளும் இருக்கிறது. . இதுவரை தன் மீதான குற்றசாட்டுகள் தொடர்பாக எந்த விதமான வாக்குமூலங்களையும் இதுவரை FCID இல் வழங்கவில்லை
மறுபுறம் மகிந்த ராஜபக்சே அவர்களின் சட்ட கல்லூரி நண்பியும் கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான ஈவா வனசுந்தேரா பிரான்ஸ் நாட்டின் தூதராக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு மிக் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான மோசடி விசாரணையில் FCID கோத்தபாயா ராஜபக்சே அவர்களை கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பித்து கோட்டபய ராஜபக்சே அவர்களை ஈவா வனசுந்தேரா காப்பாற்றி இருந்தார் . மூத்த நீதித்துறை சட்டவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்த இந்த உத்தரவு மூலம் நீதித்துறையின் சுயாதீனத்தை ஈவா வனசுந்தேரா கேள்விக்கு உட்படுத்தி இருந்தார் . ஈவா வனசுந்தேரா பிரான்ஸ் நாட்டின் தூதராக நியமிக்க பட்டதன் மூலம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இராஜதந்திர பதவிகளை வழங்குவதற்கான பழைய நடைமுறையை ராஜபக்சே குடும்பம் மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னாள் நீதித்துறை அதிகாரிகளை அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளாக நியமனம் செய்வது ஓய்வூதியத்திற்கு பிந்தைய சலுகை ஆகும் .இதனூடாக நீதி துறையின் சுயாதீனம் பாதிக்கப்படும். இது பற்றி ராஜபக்சே குடும்பத்திற்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை.
சிங்கள இனவாதியும் கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் மூத்த தத்துவாசிரியருமான நளின் டி சில்வாவும் மியான்மருக்கான தூதரக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

No comments