ரஞ்சன் கட்டிபிடித்ததால் சிக்கலில் பொலிஸ் அதிகாரி

ரஞ்சன் ராமநாயக்க எம்.பியைக் கைது செய்யச் சென்றிருந்த போது அவரை கட்டியணைத்த சம்பவம் தொடர்பில மிரிஹானை பொலிஸ் நிலையத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த பெரேராவிடம் விசார​ணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் உத்தரவுக்கிணங்க, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனால், இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பெரேராவால், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவைக் கைது செய்து, அவருக்கு கைவிலங்கு மாட்டும் போதே, இந்தக் கட்டியணைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு, பொலிஸ் பொறுப்பதிகாரி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது குறித்தே, விசாரணை நடத்தப்படுகிறது.

No comments