யாழில் தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அரச நியமனம் வழங்கக் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று (20) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
மாகாணத்தில் நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நியமனங்களை வழங்க வலியுறுத்தியுமே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது நியமனத்தை வழங்க கோரி பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடி இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநர்களாக புதிது புதிதாக வருகின்ற பலரையும் சந்தித்துள்ளோம். ஆகவே, தற்போது புதிய ஆளுநராக வந்திருக்கின்றவர் எங்களுக்கான நியமனங்களை உரிய முறையில் விரைவாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் – என பாேராட்டத்தில் ஈடுபட்டபவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் அலுவலகத்தில் ஆளுநர் இல்லாத காரணத்தினால் ஆளுநரின் ஊடக செயலாளர் எஸ்.முகுந்தன் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது எதிர்வரும் புதன்கிழமை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுமென வழங்கிய வாக்குறுதியை அடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

No comments