வருபவர்களை தவறாக வழிநடத்துகின்றனர்:சீ.வீ.கே கவலை!


வடக்கிற்கு வரும் ஆளுநர்கள் நல்லவராகவே வருகின்றனர். இதன் பின்னர் இங்கிருப்பவர்கள் சேர்ந்து பழுதாக்கி நல்ல நோக்கத்தோடு வருகிறவர்களை திரும்பி செல்கையில்; கவலையுடனேயே செல்ல வைக்கிற நிலை தான் இந்த மண்ணிலே இருக்கிறது. இதனை எச்சரிக்கையாக சொல்லி வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

வடக்கைப் பொறுத்தவரையில் மூன்று ஆளுநர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள் சகோதர இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். நான்காவது ஆளுநர் தமிழராக இருந்திருக்கிறார். ஆனால் அவர் இந்த மண்ணைச் சார்ந்தவர் அல்ல. ஆனால் திருமதி சார்ள்ஸ் பொறுத்தவரையில் முழு வடக்கு மாகாணத்தினுடைய உயிர்ப்புள்ள ஒரு பிரiஐ நிர்வாக அதிகாரி என்ற வகையில் பெருமைப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நான் பார்த்த ஆளுநர்களுக்குள்ளே பள்ளிககக்கார மிகச் சிறந்த ஆளுநர். ஆதற்காக மற்றவர்களை குறை சொல்வதாக இல்லை. நிர்வாக அறிவு நிர்வாக திறன் எல்லாம் அவரிடம் இருந்தது.

ஆகவே அந்த நிர்வாகப் பின்புலத்தில் இருந்து வருகிற நீங்கள் எங்களுடைய மக்களின் தேவைகளை நிறைவு செய்வீர்கள் அனுதாபத்தோடு பார்ப்பீர்கள், அனுதாபத்தோடு அணுகுவீர்கள் உங்களுடைய காலத்தில் ஒரு நல்ல உறவும் ; முரண்பாடுகள் அற்ற உயர்வும் இந்த மண்ணிற்கு கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

இதே வேளையில் இந்தப் பதவி நிச்சயமில்லை. அது உங்களுக்கு நிச்சயம் என்றில்லை. இருந்தும் அந்தப் பதவி இருக்கிற காலத்தில் எங்கள் மக்களுக்கானதை நீங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு பதவிக் காலத்தில் மக்களுக்கு நன்மை செய்கிறவர்கள் தான் சாதனையாளர்களாக வருவார்கள். ஆகவே நீங்கள் நன்மை செய்து நல்லது செய்து மக்களுடைய நன்மதிப்பை பெற்று சாதனையாளராக மிளிர வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

No comments