வடமாகாணத்தில் தமிழும் இல்லை:சிங்களமும் இல்லை?


இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசிய கீதம் சிங்களத்திலா தமிழிலா என்ற சர்ச்சைகளின் மத்தியில் வடமாகாணசபையோ மொழியே இல்லாமல் வெறும் இசையுடன் தனது வருடாந்த பணிகளை ஆரம்பித்துள்ளது.இன்றைய தினம் கைதடியிலுள்ள வடமாகாண புதுவருட பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வின் போதே தேசியகீதத்திற்கு பதிலாக வெறும் இசைக்கோர்வையுடன் பணிகளை ஆரம்பித்துக்கொண்டதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நாளையதினம் (02) வடமாகாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

இவ்வாறு வருகை தரும் ஆளுநரை, முற்பகல் 9 மணியளவில், மூன்று முறிப்பு பகுதியில் உள்ள நகரசபை வரவேற்பு வளைவில் இருந்து வாகன பவனியாக வரவேற்க வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

அத்துடன், வவுனியா நகரசபை மண்டபத்தில், முற்பகல் 9.30 மணிக்கு விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments