இலங்கையின் காந்தியாம் கோத்தபாய?


கோத்தாபாய தன்னை எளிமையின் சின்னமாக காண்பிக்க அடாது பாடுபட அவரது குடும்பமோ அதனை போட்டுடைப்பதையே தொழிலாக கொண்டிருக்கின்றது.

இன்று நாடாளுமன்றிற்கு தான் விஜயம் செய்தபோது மிக எளிமையாக சாதாரண பாதுகாப்புடன் சென்றிருந்ததாக ஊடகங்கள் வழியே பிரச்சாரங்களை அவர் முடுக்கிவிட்டிருந்தார்.தனக்கு ஏனைய ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டது போன்ற குதிரைப்படை பாதுகாப்பு கூட தேவையில்லையென சொன்னதாக அவரது ஆதரவு ஊடகங்கள் பரபரப்பினை காண்பித்திருந்தன.

ஆனால் அவரது சகோதரரும்  பிரதமருமான மகிந்தவோ கடும் பாதுகாப்பு படைகள் சூழ நாடாளுமன்றிற்கு சென்றிருந்தார்.குறிப்பாக கோத்தா தேவையில்லையென சொன்ன குதிரைப்படை சகிதம் மகிந்த சென்றதை சிங்கள ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.

ஏற்கனவே அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்கு நான்கு உலங்குவானூர்திகளை மகிந்த குடும்பம் பயன்படுத்திய சர்ச்சை தொடர்வது குறிப்பிடத்தக்கது.  

No comments