திகதி முடிவில்லை:கோத்தா வடக்கிற்கு!


காணாமல் போனோர் எவரும் உயிருடன் இல்லையென்ற அறிவிப்பின் பின்னராக கோத்தபாய வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். 

விசேட திட்டங்களுடன் இம்மாத இறுதிக்குள் வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள கோத்தாவின் விஜயம் செய்யவுள்ள திகதி குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென ஜனாதிபதி செயலக ஊடகப் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். 

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னர் வடக்கிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

No comments