கோத்தாவின் கனவு: மேம்பாட்டுக்கான மன்றம்?


வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல் தரப்புக்களை புறந்தள்ளி மாற்று கட்டமைப்பொன்றை அமைக்கும் கோத்தபாயவின் திட்டம் அமுலுக்கு வருகின்றது.

இத்தகைய கட்டமைப்புக்களை உருவாக்க யாழிலுள்ள இந்திய தூதரகமும்,அமெரிக்க தூதரகமும் கடும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அதனில் வெற்றி பெறமுடியவில்லை.

இந்நிலையில் கோத்தபாய அரசின் கனவாக வடகிழக்கு மாகாணத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் 'தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான மன்றம்' அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் ஆகியோரின் தலைமையிலேயே குறித்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த கலந்துரையாடலில்
வைத்தே குறித்த மன்றம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெறும் அதேவேளை யுத்தத்தினால் மிக மோசமாக பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை சமாந்திரமாக முன்னெடுத்து செல்வதற்கு சிவில் சமூகத்தின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்ததன் பின்னணியிலேயே இந்த கூட்டம் நடைபெற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களிற்கு பொருளாதார பிரச்சினையே இருப்பதாக கோத்தபாய சொல்லி வருவதுடன் மாற்று அரசியல் தலைமையினை டக்ளஸ்,கருணா உள்ளிட்டவர்கள் ஊடாக அரங்கேற்ற முயற்சிகள் முன்னெடுத்தும் வருகின்றார்.

எனினும் தமிழ் மக்கள் அதனை நிராகரித்துள்ள நிலையில் தற்போது புதிய வடிவத்துடன் கோத்தபாய களமிறங்கியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள போதிலும் வடக்கு கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை பிரதிபலிக்கும் வகையில் இன்னமும் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகின்றது.

குறிப்பாக இளையோர் வலுவூட்டல் வறுமை ஒழிப்பு விவசாயம் மீன்பிடி திறன் விருத்தி பொருளாதார வலுவூட்டல் கல்வி சுற்றாடல் நல் ஆட்சி சுகாதாரம் விஞ்ஞானமும் புதுமை படைத்தலும்இ தகவல் தொழில்நுட்பம் சட்ட உரிமைகள் தமிழர் மரபு பல்துறை ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் துறைசார் வல்லுநர்களை அடையாளம் கண்டு வளங்களை சரியான முறையில் ஒன்றுதிரட்டி சரியான திசையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வதற்காக துடிப்பும் செயற்திறனும் மிக்க சிவில் சமூக குழு ஒன்றின் தேவை இதற்கு அவசியமாக இருக்கின்றதெனவும்  விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ் ஆயர் ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் மற்றும் நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ர்கள் மற்றும் புலமையாளர்கள்(?) இணைந்து செயற்படுவதற்கு தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய  சுவாமிகள் ஆகியோரின் தலைமையில் வடக்கு கிழக்கை சேர்ந்த 50 க்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள் பேராசிரியமுன்வந்துள்ளனர் எனவும் விளக்கமளித்துள்ளனர்.

No comments