பிரித்தானியாவில் நடைபெற்ற கிட்டு உட்பட பத்துப் போராளிகளின் வீரவணக்க நிகழ்வு

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு
உட்பட பத்து போராளிகளின் 27ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது பிரித்தானிய மண்ணில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் முன்னெடுக்க பட்டது.
தாய்மண்ணின் நினைவுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்…

கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

லெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)

மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)

கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)

கடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)

கடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)

கடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.

இன்றய நிகழ்வில் கிருஷ்னராஜ் வியஜராணி பொதுசுடரினை எற்றிவைத்தார்.
தமிழர் ஒருங்கிணைப்பு குழு வெளியீட்டு பிரிவு பொறுப்பாளர் திரு தாஷன் அவர்கள்
தமிழீழ தேசிய கொடியினை எற்றிவைத்தார். ஈகை சுடரினை மன்னார் அரசியல் துறை பொறுப்பாளராக பணியற்றிய திரு சுரேஷ் அவர்கள் எற்றி வைத்தார்கள்.
திருவுருவத்திற்க்கான மலர் மாலையினை சர்மினி கண்ணன் மற்றும் சுஜித்தா ஆனந்த் அணிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சுடர் வணக்கம் மற்றும் மலர்வணக்கத்தினை செலுத்தினார்கள்.

No comments