சரவணபவனிற்கு இடமில்லை:தமிழரசும் உடைகிறது?


எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு தமிரசுக் கட்சி வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கக்கூடாது என்று அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதனையடுத்து தமிழரசுக்கட்சிக்குள் உள்ளக மோதல் உச்சம் பெற்றுள்ளது.

இதேவேளை எம்.ஏ.சுமந்திரன் சரவணபவளிற்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தாலும் வட்டுக்கோட்டைத் தொகுதிக்குரிய வேட்பாளர் யார் என்பதை வட்டுக்கோட்டைத் தொகுதிக்கிளையே தீh்மானிக்கும். அதனை எம்.ஏ.சுமந்திரன் தனித்து தீர்மானிக்க முடியாது என்று மற்றொரு சாரார் அறிவித்துள்ளனர்.

இதனிடையே எம்.ஏ.சுமந்திரன் கட்சித் தலைமை சொல்வதை மட்டுமே செய்யவேண்டும் அல்லது கட்சிக் கட்டமைப்பில் உள்ளவர்கள் கூடி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதைவிடுத்து தான் சொல்கின்றவாறு கட்சித் தலைவர் செயற்பட வேண்டும் என்று எம்.ஏ.சுமந்திரன் எதிர்பார்ப்பாரானால் தமிழரசு பிளவை சந்திக்குமென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பத்துவருடங்கள் பதவி வகித்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற அடிப்படையில் ஆசனம் வழங்கப்படாவிட்டால் வட்டுக்கோட்டைத் தொகுதி வேறுவிதமாக வியுகம் அமைக்கும் என ஈ.சரவணபவன் ஆதரவாளர்களிடையே தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள தனது ஆதரவாளர்களை தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments