இலங்கை கடற்படையே மோதி மூழ்கடித்தது?


இலங்கை கடற்படையினர் தமது படகை தாக்கி மூழ்கடித்ததாக கைதாகியுள்ள இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கல்லால் எறிந்தும் படகினால் இடித்தும் சேதமாக்கியமையினாலேயே  படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் எல்லை தான்டி உட்பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களும் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

சனிக்கிழமை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்காக புறப்பட்டோம் அவ்வாறு புறப்பட்ட எமது படகுன் ஜி.பி.எஸ் கருவி பழுதாகியிருந்தது. இந்த நிலையில் இரவு 8 மணியளவில் இலங்கை கடற்படை படகு எம்மை நோக்கி மிக அருகில் வந்தமையினால் அச்சத்தில் வேகமாக பயணிக்க முயன்றோம். இதன்போது கடற்படையினர் பெரும் கற்கள் கொண்டு எம்மைத் தாக்கினர். இதன்போது எமது படகு பல இடத்தில் சேதமடைந்தது . இவ்வாறு சேதமடைந்த படகின் மீது கடற்படையின் டோறாப் படகும் முட்டியது அதனால் படகு மேலும் சேதமடைந்து மூழ்கியதாக தெரிவித்தனர்.

No comments