ஓமானின் புதிய சுல்தானாக ஹைதம் பின் தாரிக் தேர்வு

ஓமானின் புதிய சுல்தானாக ஹைதம் பின் தாரிக் பொறுப்பேற்றுள்ளார்.
ஓமானை நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்த சுல்தான் கபூஸ் நேற்றுக் காலமானார். 
சுல்தான் கபூஸ் திருமணம் செய்து கொள்ளாததால் அவருக்கு வாரிசு இல்லை. அதனால் ஓமானை அடுத்து யார் ஆட்சி செய்வது என்ற கேள்வி எழுந்தது.
சுல்தான் கபூஸ் குடும்பத்தினர் இன்று நடத்திய சந்திப்புக்குப் பிறகு சுல்தான் கபூசின் உறவினரான ஹைதம் பின் தாரிக் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
சுல்தான் கபூஸ், ஏற்கெனவே அடுத்த சுல்தானாக ஹைதமைத் தெரிவு செய்து வைத்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
65 வயதான ஹைதம் ஓமானின் கலாசார அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.
கலாச்சார, மரபுடைமை அமைச்சராகப் பெறுப்பேற்பதற்கு முன்னர் அவர் அரசியல், வெளியுறவு அமைச்சில் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்திருந்தார்.
ஓமானின் அனைத்துலக உறவு, ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமராகப் பணியாற்றி வரும் அசாத் பின் தாரிக் புதிய சுல்தானாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் ஹைதம் பின் தாரிக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments