ஈஸ்டர் பயங்கரவாதம்| காயமடைந்த யுவதி மரணம்

கடந்த ஆண்டு இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகள் (ஐஎஸ்) மேற்கொண்ட உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நெரின் புளோரின் (26-வயது) என்பவரே இவ்வாறு 9 மாதங்களின் பின்னர் உயிரிழந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போது அவர் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

இந்த இறப்புடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது, இந்த தாக்குதலில் 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதுடன் அவர்களில் பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments