அதிகாலை நடந்த விபத்தில் இருவர் பலி

குருநாகல் - மஹாவ, பாதனிய வீதியில் ரந்தேனிகம பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் இரு பெண்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் சிறுமி உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர்.

வானத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனமையினாலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments