ஆலய கேணியில் சிறுவனின் சடலம்

யாழ்ப்பாணம் – தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .

நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது.

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments