யாழில் வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் வீடு ஒன்றுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு நிறுத்தி வைத்திருந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்த சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் சமுர்த்தி வங்கி முகாமையாளர் வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பரின் கல்வியங்காட்டில் உள்ள வீட்டு காணிக்குள் நுழைந்தே அடையாளம் தெரியாத இருவர் அங்கு தரித்திருந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து வீட்டாரும் அயலவர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments