கோர விபத்து; பலர் காயம்

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் இன்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் பயணித்துக் கொண்டிருந்த வேளை, முரசுமோட்டைப் பகுதியை கடக்கும்போது தனியார் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பின்தொடர்ந்து வந்த டிப்பர் வாகனம் தனியார் பேருந்தின் பின் பகுதியில் மோதுண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி, உதவியாளர் மற்றும் பேருந்தில் பயணித்த 9 பயணிகள் உட்பட 11 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments