விபத்தில் ஐவர் படுகாயம்!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை தியகல – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் தியகல பகுதியில் இன்று(10) காலை வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது, வானில் பயணம் செய்த ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கம்பளை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

No comments