ரஞ்சன் பொய்யர்?


முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தை திசைத்திருப்பியுள்ளதாகவும், அதனால் அவருக்கெதிரான நீதிச் செயற்பாடுகள் தடைப்படாதெனவும் தெரிவித்துள்ளார். 
எவ்வாறாயினும், சட்டவாக்க சபையின் தரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் உரிய வகையில் பேணப்படவில்லை என்றும்,  சட்டத்துரைக்கும் இதே நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சாடினார்.
இதனால் நாடாளுமன்றம் மீது நாட்டு மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை இல்லாதுபோகும் பட்சத்தில் நாடு அராஜகான நிலைமைக்குத் தள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 
மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கையில் உள்ள விடயங்களை அரசாங்கம் மறைக்காதென தெரிவித்துள்ள அவர்,  அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான உண்மையான குற்றச்சாட்டுகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

No comments